» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

வெள்ளி 16, பிப்ரவரி 2024 11:54:52 AM (IST)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் முறையே தென் ஆப்பிரிக்கா 242 ரன்னும், நியூசிலாந்து 211 ரன்னும் எடுத்தன.

இதையடுத்து 31 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 69.5 ஓவர்களில் 235 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 267 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய லதாம் 30 ரன், கான்வே 17 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய கேன் வில்லியம்சன் அபாரமாக ஆடி சதம் அடித்து அசத்தினார். இதற்கிடையில் ரவீந்திரா 20 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

மறுமுனையில் வில்லியம்சனுடன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் யங் அரைசதம் அடித்தார். இறுதியில் 94.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து நியூசிலாந்து 269 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory