» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இளம் வயதில் இரட்டை சதம்: ஜெய்ஸ்வால் புதிய சாதனை!

சனி 3, பிப்ரவரி 2024 12:19:33 PM (IST)



இங்கிலாந்து அணிக்கு எதிரான விசாகப்பட்டனம் டெஸ்டில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாச இந்திய அணி 396 ரன்கள் குவித்தது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இங்கிலாந்து 1 - 0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டனத்தில் நேற்று( பிப்.,02) துவங்கியது. ‛டாஸ் ' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்து இருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டம் இன்று துவங்கிய சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் 209 ரன்களுக்கு ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அஸ்வின் 20, பும்ரா 6, முகேஷ்குமார் ரன் எடுக்காமல் அவுட்டாக இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 396 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. குல்தீப் யாதவ் 8 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 3, சோயப் பஷீர் 3 ரேஹன் அஹமது தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

ஜெய்ஸ்வால் 277 பந்துகளில் 200 ரன்கள் எடுத்தார். இந்த இரட்டை சதம் மூலம் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த இந்தியர் வரிசையில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். 22 ஆண்டுகள் மற்றும் 37 நாட்களில், ஜெய்ஸ்வால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 ரன்கள் எடுத்த இளம் இந்திய பேட்டர்கள் பட்டியலில் வினோத் காம்ப்ளி மற்றும் சுனில் கவாஸ்கருக்குப் அடுத்ததாக 3வது இடத்தில் உள்ளார். காம்ப்லி 21 வயது 32 நாட்களில் இரட்டை சதம் அடித்தார். ​​கவாஸ்கர் 21 வயது 277 நாட்களில் 200 ரன்களை எடுத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory