» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

முதல் தர கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்கள்: புஜாரா புதிய சாதனை!

திங்கள் 22, ஜனவரி 2024 11:06:13 AM (IST)

முதல் தர கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை புஜாரா படைத்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா. இவர் ரஞ்சிப் போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார். நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் புஜாரா, விதர்பா அணியை எதிர்கொண்டார். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 43 ரன்கள் அடித்த புஜாரா, இரண்டாவது இன்னிங்சில் 66 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை புஜாரா படைத்திருக்கிறார்.

புஜாரா இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,195 ரன்கள் அடித்துள்ளார். இதேபோன்று உள்ளூர் கிரிக்கெட்டிலும் புஜாரா பட்டையை கிளப்பி இருக்கிறார். 61 சதம், 77 அரை சதம் என முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா அசத்தி இருக்கிறார். இதன் மூலம் இந்தியாவுக்காக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் புஜாரா நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார்.

அந்த பட்டியல்

1 கவாஸ்கர் - 25, 834 ரன்கள்

1. சச்சின் டெண்டுல்கர் - 25,396 ரன்கள்

3. ராகுல் டிராவிட் - 23, 794 ரன்கள்

4. புஜாரா - 20, 013 ரன்கள்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory