» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மாநில கால்பந்து போட்டியில் சென்னை அணி வெற்றி: அமைச்சர் கோப்பையை வழங்கினார்!!
சனி 9, செப்டம்பர் 2023 8:35:14 PM (IST)

நாசரேத்தில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து இறுதிப் போட்டியில் சென்னை டான்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி அணி வெற்றிபெற்று கோப்பையைதட்டி சென்றது. பரிசுக்கோப்பையை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ் ணன் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி விளை யாட்டு மைதானத்தில் பள்ளிகளுக்கி டையேயான மாநில கால்பந்து போட்டி கடந்த 04 ஆம் தேதி முதல் துவங்கி 09 ஆம் தேதி வரை நடைபெற்றது.நிறைவு நாளான நேற்று காலை நடைபெற்ற 3-வது,4-வது இடத்திற்கான போட்டியில் ஊட்டி திரு இருதய மேல்நி லைப்பள்ளி அணியும், ஆறுமுகனேரிபியர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல் அணியும் மோதின.இதில் ஊட்டிதிருஇருதயமேல் நிலைப்பள்ளி அணி வெற்றிபெற்று 3- வதுஇடத்தையும்,ஆறுமுகனேரி பியர்ல் ஸ் பப்ளிக் ஸ்கூல் அணி 4- வந்து இடத் தையும் பெற்றது.
மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி அணியும், திருச்சி காஜாமியான்மேல்நிலைப்பள்ளி அணி யும் மோதின.இதில் 2:1 என்ற கோல் கணக்கில் சென்னை டான்போஸ்கோ மேல்நிலை பள்ளி அணி வெற்றி பெற்றது.பரிசளிப்பு விழாவிற்கு தமிழக மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் தலைமை வகித்து இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி அணிக்கு ரூபாய் 20,000 ரொக்கமும் மர்காஷிஸ்கோப்பை யையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
2-வது இடத்தைப் பெற்ற திருச்சி காஜா மியான் மேல்நிலைப்பள்ளி அணிக்கு ரூபாய் 15,000 ரொக்கமும் மர்காஷிஸ் டிராபியும் வழங்கப்பட்டது.3-வது பிடித்த ஊட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளி அணிக்கு ரூபாய் 10,000 ரொக்கமும், எஸ்.ஏ.தாமஸ் கோப்பையும் வழங்கப் பட்டது.4-வது இடத்தைப்பிடித்த ஆறுமு கனேரி பியல்ஸ் பப்ளிக் ஸ்கூல் அணி க்கு ரூபாய் 5000 ரொக்கமும் எஸ்.ஏ.தா மஸ் கோப்பையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திமுக மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் எஸ்.ஆர். எஸ். உமரிசங்கர், அரசு வழக்கறிஞர் பூங்குமார், மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரகு, நாசரேத் பேரூராட்சி மன்ற தலைவர் நிர்மலா ரவி, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பார்த் தீபன், ஒன்றிய திமுக செயலாளர் நவீன்குமார், நாசரேத் நகர திமுக செய லாளர் ஜமீன் சாலமோன், முன்னாள் செயலாளர் ரவி செல்வக்குமார், நாசரேத் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அருண் சாமுவேல், நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர் சங்கத் தலைவர் ரூபன் துரை சிங், செயலாளர் ஜட்சன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி.கே.ஜெ யசீலன்,நாசரேத் மர்காஷிஸ் மேல்நி லைப் பள்ளி தலைமையாசிரியர் கென்னடி வேதராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி தாளா ளர் சுதாகர் தலைமையில் தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் ஆசிரியர் கள் பெலின் பாஸ்கர், தனபால், சுஜித் செல்வசுந்தர், ஜெயசன் சாமுவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:27:50 PM (IST)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 10, டிசம்பர் 2025 8:44:24 AM (IST)

சையத் முஷ்டாக் அலி கோப்பை: சாய் சுதர்சன் அதிரடி சதம்: தமிழக அணி ஆறுதல் வெற்றி!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:35:16 PM (IST)

ஜெய்ஸ்வால் அபார சதம் : தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இந்தியா!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:02:16 AM (IST)

ருதுராஜ், கோலி சதம் வீண் : 359 ரன்களை வெற்றிகரமாக விரட்டிய தென் ஆப்பிரிக்கா!
வியாழன் 4, டிசம்பர் 2025 10:47:32 AM (IST)


.gif)