» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய போட்டி: இந்திய செஸ் அணி அறிவிப்பு

திங்கள் 10, ஜூலை 2023 12:33:54 PM (IST)

சீனாவில் நடைபெற உள்ள ஆசிய போட்டிக்கான இந்திய செஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹாங்சோவில் வருகிற செப்டம்பர் 23-ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்குகின்றன. இந்நிலையில் கான்பூரில் இன்று நடைபெற்ற அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் (AICF) தலைவர் சஞ்சய் கபூர் தலைமையிலான பொதுக்குழு கூட்டத்தில் ஆசிய போட்டிக்கான செஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆசிய போட்டிக்கான இந்திய ஆண்கள் பிரிவில் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா, அர்ஜூன் எரிகாசி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் பெண்கள் பிரிவில் கொனெரு ஹம்பி, ஹரிகா துரோனவல்லி, வைசாலி, வந்திக்கா அகர்வால், சவிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory