» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம்!

புதன் 5, ஜூலை 2023 5:12:23 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் பந்து வீச்சாளர் அஜித் அகர்கரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நியமித்துள்ளது. 

சீனியாரிட்டி அடிப்படையில் அவர் இந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த பொறுப்புக்கு நான்கு பேர் விண்ணப்பித்திருந்தாக தெரிகிறது. இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விரைவில் விளையாட உள்ளது. அதற்கான அணியை தேர்வுக்குழு தலைவர் அகர்கர் தலைமையில் தேர்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் அகர்கர்: 45 வயதான அகர்கர், இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 1998 முதல் 2007 வரை விளையாடி உள்ளார். 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இது மட்டுமல்லாது 110 ஃபர்ஸ்ட் கிளாஸ் மற்றும் 270 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடி உள்ளார். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடியவர். 1999, 2003 மற்றும் 2007 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடி உள்ளார். 2002 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2007 டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory