» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய ஸ்குவாஷ் போட்டி: தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால்சிங் இணை சாம்பியன்!

வெள்ளி 30, ஜூன் 2023 5:44:05 PM (IST)



ஆசிய ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால்சிங் இணை சாம்பியன் பட்டம் வென்றது. 

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால்சிங் இணை மலேசியாவின் ரேச்சல் அர்னால்ட் - யுவான் யூயன் இணையை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 11-10 , 11-8 என்ற கணக்கில் ரேச்சல் அர்னால்ட் - யுவான் யூயன் இணையை வீழ்த்தி இந்தியாவின் தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால்சிங் இணை சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால்சிங் இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory