» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணிகள் அறிவிப்பு

வெள்ளி 23, ஜூன் 2023 8:18:43 PM (IST)

வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் போட்டியும் அடுத்து ஒருநாள் போட்டிகளும் நடக்கிறது.

இந்நிலையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இரு அணிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யாவும், டெஸ்ட் தொடருக்கு ரகானேவும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் அணியில் புஜாரா நீக்கப்பட்டுள்ளார். புதுமுகமாக ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.  ஒருநாள் அணியை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் ருதுராஜ், ஜெய்ஸ்வால் மற்றும் உம்ரான் மாலிக், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஒருநாள் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்கூர், ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.

டெஸ்ட் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரகானே, கேஎஸ் பரத், இஷான் கிஷான், அஷ்வின், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory