» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31ல் தொடக்கம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வியாழன் 15, ஜூன் 2023 4:53:56 PM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31ல்  தொடங்கும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் , ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன . பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றால் அதில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது. இதையடுத்து இந்தியாவுடனான போட்டிகளை பொதுவான இடத்திலும், மற்ற நாடுகளின் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தவும் பாகிஸ்தான் பரிந்துரை செய்திருந்தது.

அதன்படி ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ளன. 4 போட்டிகள் பாகிஸ்தானில் , மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory