» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்த ஷர்துல் தாக்குர்!

சனி 10, ஜூன் 2023 11:29:28 AM (IST)



உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியின் 3வது நாளில் இந்திய வீரர் ஷர்துல் தாக்குர் அரைசதம் அடித்ததன் மூலம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.  

ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார் ஷர்துல் தாக்குர் இந்தியாவை ஃபாலோ ஆன் ஆவதிலிருந்து காப்பாற்றினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். அஜிங்கியா ரஹானே 89 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஷர்துல் தாக்குர் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். 

இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய உமேஷ் யாதவ் 5 ரன்களிலும், முகமது ஷமி 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய ஆஸி அணி 123/4 ரன்கள் எடுத்துள்ளது. கேமரூன் கிரின் 7 ரன்களுடனும் மார்னஸ் லபுஷேன் 41 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

ஒவல் மைதானத்தில் வெளிநாட்டு வீரர் தொடர்சியாக 3 முறை அரைசதம் அடித்துள்ள பட்டியலில் தாக்குரும் இணைந்துள்ளார்.  2021-2023 தொடரில் தாக்குர் 57 (36), 60 (72), 51 (109) என தொடர்ச்சியாக அரைசதம் அடித்துள்ளார். டான் பிராட்மேன், ஆலன் பார்டரை தொடர்ந்து ஷர்துல் தாக்குர் சமன் செய்துள்ளார். இதற்குமுன் 1930-1934இல் பிராட்மேன் இதை செய்தார். ஆலன் பார்டர் 1985-1989இல் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த ஆலரவுண்டராக தாக்குர் முன்னேறி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory