» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சூர்யகுமார் யாதவ் மிரட்டல் சதம்: குஜராத் அணியை வீழ்த்தியது மும்பை!!

சனி 13, மே 2023 10:24:57 AM (IST)



குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தல் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து அசத்தினார். 

ஐபிஎல் தொடரின் 57ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து அசத்தினார். அவர் 49 பந்துகளில் 6 சிக்சர்கள், 11 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் விளாசி 103 இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சூர்யகுமார் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். நடப்பு ஐபிஎஸ் தொடரில் ஹேரி புரூக், ஜெய்ஸ்வால், வெங்கடேஷ் ஐயரை தொடர்ந்து தற்போது சூர்யகுமார் யாதவும் சதம் அடித்து அசத்தியுள்ளார். இன்றையப் போட்டி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிக முக்கியமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து களமிறங்கிய குஜராத் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை வீரா் சூா்யகுமாா் யாதவ், ஐபிஎல் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தாா். 49 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். சர்வதேச டி20யில் 3 சதத்தினை அடித்திருந்தாலும் இதுதான் ஐபிஎல்லில் முதல் சதம். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory