» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணி முதலிடம்!

செவ்வாய் 2, மே 2023 4:18:08 PM (IST)



டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. 15 மாதங்களாக முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

வருடாந்திர தரவரிசை மதிப்பீட்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. இந்தியா 119 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்தது. ஆண்டு தர நிர்ணய மதிப்பீடுகளின்படி மே 2020 முதல் மே 2022 வரை நடைபெற்ற போட்டிகளுக்கு 50 சதவிகித புள்ளிகளும், அதற்கு பிறகான போட்டிகளுக்கு 100 சதவிகித புள்ளிகளும் வழங்கப்படும். இதனால் ஆஸி. 2019-2020இல் பாகிஸ்தான் (2-0), நியூசிலாந்து (3-0) உடனான வெற்றி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

2021-2022 இங்கிலாந்துடன் வென்ற (4-0) தொடருக்கும் புள்ளிகளே கிடைத்தது. இதனால் ஆஸி. அணியின் புள்ளிகள் 121லிருந்து 116 ஆக குறைந்தது. இதே முறைப்படி இந்தியா 2019இல் நியூசிலாந்து அணியிடம் (2-0) என தோல்வியுற்றது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதனால் 2 புள்ளிகள் அதிகமாகி இந்திய அணி 121 புள்ளிகளுடன் முதலிடத்தில் வந்துள்ளது. ஜூன் 7ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory