» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜூனியர் உலக குத்துச் சண்டையில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!

சனி 20, ஆகஸ்ட் 2022 5:32:46 PM (IST)

இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனை அண்டிம் பங்கல்  53கிலோ பிரிவில் ஜூனியர் உலக குத்துச் சண்டையில் முதன் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். 

யு-20 உலக குத்துச் சண்டை போட்டியில் அண்டிம் பங்கல் எனும்முதன் முறியாக தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். புல்கேரியாவை சேர்ந்த சோபியாவை 8-0 எனற கணக்கில் வென்று தங்கம் வென்றார் அண்டிம் பங்கல். 

மற்ற இரண்டு இந்தியர்கள் சோனம், பிரியங்கா முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். இதனால் இந்திய அணி 160 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இருந்தது. ஜப்பான் 230 புள்ளிகளுடன் முதலிடத்திலும் அமெரிக்கா 124 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

"உங்களுடைய கடின உழைப்பு மற்றும் ஈடுபாட்டிற்கு இந்தியா மரியாதை செலுத்துகிறது. ஒளிமயமான வருங்காலத்திற்கு வாழ்த்துகள். தொடர்ந்து ஜொலித்துக்கொண்டு இருங்கள்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாரட்டியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory