» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய கால்பந்து வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டல்: ஊழியர் சஸ்பெண்ட்!

வியாழன் 30, ஜூன் 2022 5:39:36 PM (IST)

இந்திய கால்பந்து வீராங்கனைகளிடம் அத்துமீறி தவறான நடத்தையில் ஈடுபட்ட ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் கால்பந்து அணி தற்போது ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணத்தில் உள்ளது. கால்பந்து அணியினர் ஜூலை 1 முதல் ஜூலை 7 வரை நார்வேயில் நடைபெறும் 'ஓபன் நோர்டிக்' போட்டிக்கு தயாராகி வருகின்றனர். இந்திய அணி நோர்டிக் போட்டியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக, ஜூன் 22 முதல் 26 வரை இத்தாலியில் நடைபெற்ற 6வது டோர்னியோ பெண்களுக்கான கால்பந்து போட்டியில் இளம் இந்திய அணி பங்கேற்றது. இந்திய அணியின் இத்தாலி சுற்றுப்பயணத்தில் குழுவுடன் அந்த ஊழியர் இருந்தார். ஆனால் அணியினருடன் அவர் எந்த புகைப்படங்களிலும் காணப்படவில்லை. இந்த நிலையில், அவர் சில வீராங்கனைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.

அந்த ஊழியரின் பெயரை கால்பந்து சம்மேளனம் வெளியிடவில்லை. ஆனால் தற்காலிகமாக அந்த நபரை இடைநீக்கம் செய்து மேலும் விசாரணையைத் தொடங்கியது. ஒழுக்கமின்மை விவகாரத்தில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கால்பந்து சம்மேளனம் பின்பற்றுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட நபரை அணியுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்தி, உடனடியாக இந்தியாவுக்குத் திரும்பவும், அவர் வந்தவுடன் மேலதிக விசாரணைக்கு நேரடியாக ஆஜராகவும் கால்பந்து சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory