» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் : தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
செவ்வாய் 17, மே 2022 3:22:06 PM (IST)
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் ஜூன் 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடக்கிறது. ஜூன் 9 அன்று டெல்லியில் போட்டி தொடங்கும். இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், பும்ரா, ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது.
இதனால் இந்த தொடரில் இந்தியா அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா, அல்லது ஷிகர் தவான் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. குயிண்டன் டி காக், டெம்பா பவுமா, ரீஸா ஹெண்ட்ரிஸ், கிளாசென், கேஷவ் மஹாராஜ், மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, பர்னெல்,நோர்ஜே , டுவைன் பிரிட்டோரியஸ் , ரபாடா, ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வாண் டர் டுசென், மார்கோ ஜான்சன்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:33:53 AM (IST)

பிசிசிஐ தலைவராக நியமனம்? சச்சின் மறுப்பு!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:40:15 AM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: எமிரேட்ஸ் அணியை பந்தாடிய இந்தியா!
வியாழன் 11, செப்டம்பர் 2025 10:50:35 AM (IST)

உலக குத்துச்சண்டை போட்டி: இந்தியாவின் நிகாத் ஜரீன் கால்இறுதிக்கு முன்னேற்றம்!!
புதன் 10, செப்டம்பர் 2025 11:41:08 AM (IST)

ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன்: இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 11:25:02 AM (IST)

ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி உலக சாதனை!
திங்கள் 8, செப்டம்பர் 2025 4:06:03 PM (IST)
