» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அம்பத்தி ராயுடு ஓய்வு பெறவில்லை : சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி விளக்கம்

சனி 14, மே 2022 5:22:21 PM (IST)

அம்பத்தி ராயுடு ஓய்வு பெறவில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அம்பத்தி ராயுடு, அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்து வருகிறார். இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக அம்பத்தி ராயுடு கூறியுள்ளது சென்னை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. 

தனது ஓய்வு முடிவு குறித்து ராயுடு கூறும்போது, "இது எனது கடைசி ஐபிஎல் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 13 வருடங்களாக 2 சிறந்த அணிகளில் அங்கம் வகித்து விளையாடியதில் எனக்கு ஒரு அற்புதமான நேரம் கிடைத்தது. அற்புதமான பயணத்திற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கேக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்," என்று அவர் டுவீட் செய்துள்ளார்.

டுவிட்டரில் தனது ஓய்வு முடிவை அறிவித்த அவர், சிறிது நேரத்தில் அதனை நீக்கினார், இதன்பிறகு அவர் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தனியார் தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது ; சரியாக செயல்படாததால் சற்று அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார் . அதனால், தவறுதலாக அந்த டுவிட்டை பதிவிட்டுள்ளார் . அவர் ஓய்வு பெறவில்லை".அவர் எங்களுடன் இருப்பார்."என்று விஸ்வநாதன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory