» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி-20 போட்டிகளில் அதிக அரைசதம்: டேவிட் வார்னர் சாதனை

வெள்ளி 6, மே 2022 5:24:17 PM (IST)டி-20 போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்து டேவிட் வார்னர் புதிய சாதனை படைத்துள்ளார். 

15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி - ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ரன் குவித்தது.டேவிட் வார்னர் 58 பந்தில் 92 ரன்னும், ரோமன் பாவெல் 35 பந்தில் 67 ரன்னும் எடுத்தனர். 

பின்னர் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் டேவிட் வார்னர் 89-வது அரை சதம் கடந்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்தவர் என்ற புதிய சாதனை படைத்தார். இவருக்கு அடுத்த இடத்தில் கிறிஸ் கெயில் 88 அரை சதம், விராட் கோலி 77 அரை சதம் அடித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory