» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் : பிளே ஆஃப் அட்டவணை வெளியீடு!

புதன் 4, மே 2022 11:38:12 AM (IST)

ஐபிஎல் 2022 பிளே-ஆஃப் சுற்று அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. 

உலக கிரிக்கெட் அரங்கில் கவனம் ஈர்த்துள்ள டி20 கிரிக்கெட் தொடர்களில் ஒன்று ஐபிஎல். நடப்பு ஆண்டுக்கான தொடரில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

70 லீக் போட்டிகளும் மும்பை, புனே ஆகிய பகுதிகளில் உள்ள மைதானங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. கரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஏற்பாடு. அதன்படியே இப்போது போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த சுற்றான பிளே-ஆஃப் சுற்று எங்கு நடக்கிறது என்ற விவரம் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்று

 மே 24 - குவாலிபையர் 1 - கொல்கத்தா

 மே 25 - எலிமினேட்டர் - கொல்கத்தா

மே 27 - குவாலிபையர் 2 - அகமதாபாத்

மே 29 - இறுதிப்போட்டி - அகமதாபாத்

புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும். அதே போல் மே 23 முதல் 28 வரையில் நான்கு போட்டிகள் கொண்ட மகளிர் டி20 சேலஞ்ச் தொடர் புனேவில் நடைபெறும் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிசிசிஐ தலைவராக நியமனம்? சச்சின் மறுப்பு!

வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:40:15 AM (IST)

Sponsored Ads




Thoothukudi Business Directory