» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனி தலைமையிலான சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு: சேவாக் கணிப்பு

செவ்வாய் 3, மே 2022 3:52:57 PM (IST)தோனி தலைமையிலான சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் கணித்துள்ளார்.

நடப்பு சீசனில் சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். அவரும் சென்னை விளையாடிய முதல் எட்டு போட்டிகளில் அணியை வழிநடத்தினார். அதில் இரண்டு போட்டிகளில் மட்டுமே சென்னை வெற்றி பெற்றிருந்தது. அண்மையில் கேப்டன் பொறுப்பை துறந்தார் ஜடேஜா. அதோடு மீண்டும் தோனி வசம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். தோனி தலைமையில் நடப்பு தொடரில் களமிறங்கிய சென்னை அணி முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது. சென்னை அணி பெங்களூரு, டெல்லி, மும்பை, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக நடப்பு சீசனில் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்நிலையில், தோனியின் தலைமையின் கீழ் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளதாக சேவாக் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் "கடந்த 2005 முதல் தோனியுடன் பயணித்துள்ளேன். அவரது தலைமையிலான இந்திய அணி நிறைய மாற்றங்களை சந்தித்ததை நான் பார்த்துள்ளேன். ஐசிசி நாக்-அவுட், சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர்களை இந்தியா வென்றது. தோல்விகள் அனைத்தும் வெற்றிகளாக மாறின. அதனால் அதை மனதில் வைத்து சொல்கிறேன். சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம். அது நடக்கலாம். வரிசையாக ஆறு வெற்றிகளை சென்னை குவிக்கலாம்" என சேவாக் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory