» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா ஓய்வு அறிவிப்பு..!
வெள்ளி 21, ஜனவரி 2022 11:38:29 AM (IST)

இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 14-வது ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கும் சானியா மிர்சா 19 வருடங்களாக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் கலந்துகொண்டார் சானியா மிர்சா. பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா கிச்னோக் இணை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி - ஸ்டோர்ம் சான்டெர்ஸ் ஜோடியுடன் மோதியது. இதில் சானியா மிர்சா ஜோடி தோல்வி அடைந்தது.
இதை தொடர்ந்து சானியா மிர்சா டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். சானியா மிர்சா கூறும் போது ‘இனி நான் விளையாடப்போவதில்லை. இதற்கு சில காரணங்கள் இருக்கிறது. காயத்திலிருந்து முன்பைப்போல் மீண்டு வர எனது உடல் ஒத்துழைக்கவில்லை. எனது உடல் அதன் வலுவை இழக்க தொடங்கியிருக்கிறது.
நான் எங்கு சென்றாலும் எனது மூன்று வயது மகனை உடன் அழைத்து செல்வதன் மூலம் அவனுடைய ஆரோக்கியத்தை அபாயத்திற்குள்ளாக்குகிறேன். இந்த சீசன் முடியும் வரை நான் விளையாடுவேன். கடின உழைப்பால் எனது உடல் எடையை குறைத்து, இளம்தலைமுறை தாய்மார்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்திருக்கிறேன்' என்று அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் 2026: தொடக்கப் போட்டிகளில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள்!
வெள்ளி 20, மார்ச் 2026 4:17:37 PM (IST)

சிஎஸ்கே-வில் சஞ்சு சாம்சன்: 11-ஆம் எண் ஜெர்சியுடன் களமிறங்குகிறார்!
வியாழன் 19, மார்ச் 2026 5:17:25 PM (IST)

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: பிசிசிஐ விளக்கம்!
சனி 14, மார்ச் 2026 11:10:49 AM (IST)

வாழ்த்துப் பதிவில் சஞ்சு சாம்சன் நீக்கம்: சர்ச்சையில் சிக்கிய ஷுப்மன் கில்!
சனி 14, மார்ச் 2026 10:29:35 AM (IST)

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு!
வெள்ளி 13, மார்ச் 2026 12:28:11 PM (IST)

ஐபிஎல் 2026: மார்ச் 12-ல் முதற்கட்ட அட்டவணை வெளியீடு!
செவ்வாய் 10, மார்ச் 2026 5:18:07 PM (IST)

