» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நியூஸிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: உம்ரான், வெங்கடேஷ்க்கு வாய்ப்பு

புதன் 10, நவம்பர் 2021 10:31:51 AM (IST)

நியூஸிலாந்துக்கு எதிராக நடக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய பல வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாயப்பளிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி, ரவி சாஸ்திரி இருவருமே இந்திய அணிக்கு அடுத்ததாக பொருத்தமான கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பார் என்று சுட்டிக்காட்டினர். இதனால் வேறு வழியின்றிகூட ரோஹித் சர்மா டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கலாம், ஆனால், நீண்டகாலத்தில் ரோஹித் சர்மாதான் கேப்டனாக இருப்பார் என்பதற்கான உறுதியும் இல்லை.

புதிய பயிற்சியாளராக ராகுல் திராவிட், துணைப்பயிற்சியாளர்கள், பந்துவீச்சுப் பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர் புதிதாக வரும்போது, நீண்டகால நோக்கில், அடுத்துவரும் ஆஸ்திரேலிய டி20 உலகக் கோப்பையை கருத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டி முடிந்தவுடன் இந்தியா வரும் நியூஸிலாந்து அணி 17ம் தேதி முதல் டி20 தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணி மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணைக் கேப்டனாக கே.எல்.ராகுலும் அறிவிக்கப்பட்டுள்ளனர். விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோருக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த 4 பேரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாடி வருவதால் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல உடற்தகுதியின்றி கஷ்டப்படும் ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூருக்கும்கூட ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பையிலும், இங்கிலாந்து தொடரிலும் இருந்த ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ரவிச்சந்திர அஸ்வின், சூர்யகுமார் யாதவ், ஆகியோர் நியூஸிலாந்து தொடரில் சேர்க்க்பட்டுள்ளனர். இவர்கள் தவிர ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக சிறப்பாக் செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கலக்கிய ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர், பந்துவீச்சாளர்கள் ஹர்ஸல் படேல், ஆவேஷ் கான் ஆகியோர் இந்திய அணியில் அறிமுகமாகின்றனர்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் வாய்ப்புப் பெறாத சுழற்பந்துவீச்சாளர் யஜுவேந்திர சஹல் அணியில் சேர்்க்கப்பட்டுள்ளார். ஆனால், ராகுல் சஹர், டி20 உலகக் கோப்பையில் இடம்பெற்ற மிஸ்ட்டிரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சேர்்க்கப்படவில்லை. உலகக் கோப்பைப் போட்டியில் அணியில் இருந்தும் வாய்ப்புப் பெறாத ஸ்ரேயாஸ் அய்யர், பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேகப்பந்துவீச்சில் முகமது சிராஜ், ஹர்சல் படேல், ஆவேஷ் கான், தீபக் சஹர் என 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றாலும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்குகிறது இந்திய அணி. இங்கிலாந்து தொடருக்குப்பின் தமிழகவீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் அவரை பரிசிலீத்திருக்கலாம். இளம் வீரர்களை எடுத்து தயார்படுத்த வேண்டும் என்ற திட்டமிட்டு, ஃபார்மில் இல்லாத வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுழற்பந்துவீச்சுக்கு அஸ்வின், அக்ஸர் படேல், யஜுவேந்திர சஹல் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

இந்திய அணி விவரம்:

ரோஹித் சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல்(துணைக் கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், புவனேஷ்வர் குமார், ரிஷப்பந்த், இஷான் கிஷன், ரவிச்சந்திர அஸ்வின், யஜுவேந்திர சஹல், அக்ஸர் படேல், ஆவேஷ்கான், தீபக் சஹர், ஹர்சல் படேல், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் அய்யர்,முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ்.

அதுமட்டுல்லாமல் தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய ஏ அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 நாட்கள் வரை நடக்கும் 3போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. இதில் பிரித்வி ஷா, வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஏ அணி விவரம்:

பிரியங்க் பஞ்சல்(கேப்டன்), பிரித்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல், சர்பிராஸ் கான், பாபா அபராஜித், உபேந்திர யாதவ், கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் சஹர், சவுரவ் குமார், நவ்தீப் ஷைனி, உம்ரான் மாலிக், இஷான் போரல், அர்ஜான் நாகஸ்வாலா


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory