» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நீரஜ் சோப்ரா உள்பட 12 பேருக்கு கேல் ரத்னா விருது

புதன் 3, நவம்பர் 2021 10:49:38 AM (IST)டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் நீரஜ் சோப்ரா உட்பட 12 பேருக்கு தயான் சந்த்  கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 13-ம் தேதி  தில்லியில் நடைபெறும் விழாவில் 12 வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தேசிய விளையாட்டு விருதுகள் குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் ரவிக்குமார், லவ்லினா, ஸ்ரீஜேஷ், அவனி லேகரா, பிரமோத் பகத், மிதாலி ராஜ், மன்பிரீத் சிங், சுனில் சேத்ரிக்கு தயான் சந்த்  கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.

விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தயான் சந்த்  கேல் ரத்னா விருது விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். 

அர்ஜுனா விருது:

விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்த 35 தடகள வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்குவதற்கும் விளையாட்டு விருதுகள் குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி ஷிகர் தவான், வந்தனா கட்டாரியா, பவானி தேவி, அபிஷேக் வர்மா, தீபக் புனியா, ஹர்மன் பிரீத் சிங், மன்தீப் சிங், பவினா படேல், ஷரத் குமார், வருண் குமார் உள்பட 35 பேருக்கு விருது வழங்கப்படுகிறது.

இதேபோன்று வாழ்நாள் பிரிவில் 5 பயிற்சியாளர்கள் உள்பட 10 பேருக்கு துரோணாச்சார்யா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory