» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து அணி!

செவ்வாய் 2, நவம்பர் 2021 11:13:42 AM (IST)டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது.

டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் தடுமாடினாலும், ஜாஸ் பட்லரின் அதிரடி சதம் மற்றும் கேப்டன் மோர்கனின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி 163 ரன்களை எடுத்தது. பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான நிஷாங்கா(1), குசல் பெரெரா(7) அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஓரளவு விளையாடினாலும் அவர்களால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. இறுதியில் இலங்கை அணி 19 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory