» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நியூசியிடம் படுதோல்வி: டி-20 உலக கோப்பையில் இருந்து வெளியேறுகிறது இந்திய அணி!

திங்கள் 1, நவம்பர் 2021 10:16:17 AM (IST)



பந்துவீச்சிலும் துணிச்சல் இல்லை, பேட்டிங்கிலும்துணிச்சலோடு செயல்பட வில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தோல்விக்குப்பின்ஆதங்கத்தோடு தெரிவித்தார்.

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் விளையாடின. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதல் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்தில் மற்றும் டேரில் மிட்செல் களமிறங்கினர். 

முதலிரண்டு ஓவர்களில் வருண் சக்ரவர்த்தி மற்றும் ஜாஸ்பிரித் பும்ரா மூலம் ரன் குவிக்க அனுமதிக்காமல் இந்திய அணி நெருக்கடியளித்தாலும், வருண் வீசிய 3-வது ஓவரில் கப்தில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்து நெருக்கடியை சற்று தணித்தார். இதையடுத்து ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அணி மீண்டும் முயற்சித்தது. ஆனால், நியூசிலாந்து அணி 15-வது ஓவரில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்புக்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் நியூஸிலாந்து வென்றுவிட்டால் அரையிறுதி ஏறக்குறைய உறுதியாகிவிடும். அதேசமயம், இந்திய அணியை தாயகத்துக்கு நியூஸிலாந்து டிக்கெட் போட வைத்துள்ளது. இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது. ஏறக்குறைய இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேறிவிட்டது. 

கடந்த 2007ம் ஆண்டு 50 ஓவர்கள் உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் இந்திய அணிக்கு மோசமான வெளிேயற்றமாக அமைந்துள்ளது. இந்த தோல்விக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அளி்த்த பேட்டியில் கூறியதாவது: இந்த தோல்வி ரொம்பவமே விச்திரமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. நேர்மையாகச் சொல்லப் போனால், ரொம்ப கொடூரமாக இருக்கிறது. பந்தவீச்சிலும், பேட்டிங்கிலும் நியூஸிலாந்துக்கு எதிராக நாங்கள் துணி்ச்சலாகச் செயல்படவில்லை.

பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. குறைந்த ஸ்கோரை எடுத்ததால் களத்தில் நுழைந்தபோது எங்களால் போதுமான துணிச்சலுடன் செல்லவில்லை. ஆனால், நியூஸிலாந்து அணியினர் தீவிர உணர்ச்சியுடன், நல்ல நம்பிக்கையான உடல்மொழியுடன் இருந்தனர். எங்கள் மீது முதல் ஓவரிலிருந்து நெருக்கடியையும், அழுத்தத்தையும் அளித்தனர். அது கடைசிஓவர் வரை தொடரவும் செய்தது.

பேட்டிங் செய்தபோது, ஒவ்வொருமுறையும் இந்த பந்தை அடித்துவிடலாம், அடுத்த பந்தை அடித்துவிடலாம் என்று நினைத்தோம். ஆனால், விக்கெட்டை இழந்துவிட்டோம். இது டி20 கிரிக்கெட்டில் நடக்கும். ஆனால் பெரும்பாலும் ஷாட்களை அடிக்கும்போதெல்லாம் விக்கெட்டை இழப்பது வெறுப்பை ஏற்படுத்தும்.

உலகளவில் அதிகமான ரசிகர்களைக் கொண்டுள்ள நாங்கள், உலகக் கோப்பை கோப்பைபோன்ற சர்வதேச போட்டியில் விளையாடும்போது எப்போதுமே எதிர்பார்ப்பு குறித்த அழுத்தம் இருக்கும். ஆனால், எங்களால் பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளுக்கு எதிராக அழுத்தத்தை கடந்து வரமுடியவில்லை.

இந்திய அணிக்காக விளையாடும்போது, ஏராளமான எதிர்பார்ப்புகள் இருக்கும், ரசிகர்களிடம் இருந்து மட்டுமல்ல, வீரர்களிடமும் எதிர்பார்ப்புகள் இருக்கும். எங்கு நாங்கள் விளையாடினாலும், நாங்கள் பார்க்கப்படுகிறோம், மக்கள் அரங்கிற்கு வந்து எங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.

நாங்கள் குழுவாக இருக்கும்போது கடினமான சூழல்களில் அந்த அழுத்தத்தை கடந்து வந்திருக்கிறோம். ஆனால், கடந்த 2 போட்டிகளிலும் அந்த அழுத்தத்தை கடக்க முடியவில்லை, போட்டிகளில் வெல்லவும் முடியவில்லை. டி20 போட்டிகளில் இதை கடந்து வர ஒரேவழி எப்போதும் நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும், எந்தவிதமான ரிஸ்க் எடுக்கிறோமோ அதைக்கணக்கிட வேண்டும். இதுதான் இந்தப் போட்டிக்கு உகந்தது.
இ்வ்வாறு கோலி தெரிவித்தார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory