» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐ.பி.எல். போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி

புதன் 15, செப்டம்பர் 2021 5:45:27 PM (IST)ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

ஐ.பி.எல். 2021 சீசன் இந்தியாவில் நடைபெற்றது. கொரோனா 2-வது அலை உச்சநிலையை அடைந்தபோது போட்டி நடைபெற்றதால் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பாதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் பாதுகாப்பு வளையத்தையும் மீறி வைரஸ் தொற்றால் வீரர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் ஐ.பி.எல். தொடர் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

மீதமுள்ள ஆட்டங்கள் ஐ.பி.எல். 2021 சீசன் 2-வது பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட இருக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 19-ந்தேதி (ஞாயிறு) நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த நிலையில் நாளையில் இருந்து போட்டிகளை ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதுவரை நேரில் சென்று கிரிக்கெட்டை பார்க்க முடியாத ரசிகர்கள் தற்போது நேரில் கண்டுகளிப்பதுடன், அவர்களுக்கு பிடித்தமான அணிக்கு ஆதரவையும் தெரிவிக்கலாம். துபாயில் 13 ஆட்டங்களும், ஷார்ஜாவில் 10 ஆட்டங்களும், அபு தாபியில் 8 ஆட்டங்களும் நடைபெற இருக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory