» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பாராலிம்பிக் டேபிள் டென்னிசில்: அரையிறுதி போட்டியில் இந்தியா வெற்றி

சனி 28, ஆகஸ்ட் 2021 12:40:23 PM (IST)டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பாவின படேல்  இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். 

டோக்கியோவில் நடைபெற்று வரும்  பாராலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் அரை இறுதிப்போட்டியில் 34 வயதாகும் இந்தியாவின் பாவினா பட்டேல் சீனாவின் மியாவோ ஜாங்கை எதிர்த்து ஆடினார். மொத்தம் 34 நிமிடங்கள் அரை இறுதிப் போட்டிக்கான ஆட்டங்கள் நடந்தன. மொத்தம் நடந்த 5 ஆட்டங்களில் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் சீனாவின் யிங் ஜூ-வை எதிர்த்து ஆமதாபாத்தைச்  சேர்ந்தபவினா பட்டேல் விளையாட இருக்கிறார். இறுதிப்போட்டி ஆட்டங்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory