» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு: அக். 24-இல் இந்தியா-பாகிஸ்தான் மோதல்

செவ்வாய் 17, ஆகஸ்ட் 2021 12:59:49 PM (IST)

டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு குழுக்களாக பிரிந்து மொத்தம் 12 அணிகள் விளையாடவுள்ளன. இதில், குரூப் 1இல் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்தியா உள்ளிட்ட அணிகளும், குரூப் 2இல் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து உள்ளிட்ட அணிகளும் மோதவுள்ளன.

முதல் அரையிறுதி அபுதாபியில் நவம்பர் 10ஆம் தேதியும், இரண்டாம் அரையிறுதி துபையில் நவம்பர் 11ஆம் தேதியும், இறுதிப் போட்டி துபையில் நவம்பர் 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. மேலும் சூப்பர் 12 சுற்றில், இந்திய அணி அக். 24இல் பாகிஸ்தான், அக்.31இல் நியூஸிலாந்து, நவ.3இல் ஆப்கானிஸ்தான் மற்றும் நவ.5இல் தகுதிச் சுற்றில் தகுதி பெறும் அணியுடன் மோதவுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory