» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: கேன் வில்லியம்சன் மீண்டும் முதலிடம்
வெள்ளி 2, ஜூலை 2021 12:08:10 PM (IST)

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார். இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிஆட்டத்தில் 49 மற்றும் 52 ரன்கள் வீதம் எடுத்து தங்கள் அணி மகுடம் சூடுவதில் முக்கிய பங்காற்றிய அவர் 15 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று மொத்தம் 901 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்.
இதனால் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் (891 புள்ளி) 2-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் (878 புள்ளி) 3-வது இடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோலி 4-வது இடத்திலும் (812 புள்ளி), இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (797 புள்ளி) 5-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கிறார்கள்.
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 3 இடங்களில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், இந்தியாவின் அஸ்வின், நியூசிலாந்தின் டிம் சவுதி அப்படியே தொடருகிறார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சோபிக்கத் தவறிய இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஆல் ரவுண்டர்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு சறுக்கியுள்ளார். வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் மீண்டும் முதலிடத்துக்கு வந்துவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: பிசிசிஐ விளக்கம்!
சனி 14, மார்ச் 2026 11:10:49 AM (IST)

வாழ்த்துப் பதிவில் சஞ்சு சாம்சன் நீக்கம்: சர்ச்சையில் சிக்கிய ஷுப்மன் கில்!
சனி 14, மார்ச் 2026 10:29:35 AM (IST)

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு!
வெள்ளி 13, மார்ச் 2026 12:28:11 PM (IST)

ஐபிஎல் 2026: மார்ச் 12-ல் முதற்கட்ட அட்டவணை வெளியீடு!
செவ்வாய் 10, மார்ச் 2026 5:18:07 PM (IST)

டி20 உலகக் கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு: பிசிசிஐ அறிவிப்பு!
செவ்வாய் 10, மார்ச் 2026 5:12:49 PM (IST)

டி20 உலகக் கோப்பை 3-வது முறையாக சாம்பியன்: வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 9, மார்ச் 2026 8:29:49 AM (IST)

