» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஆல்ரவுண்டர் ஜடேஜா முதலிடம்

புதன் 23, ஜூன் 2021 5:34:23 PM (IST)சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில்  ஆல்ரவுண்டர் பிரிவில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடம்  பிடித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த நிலையில் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜேசன் ஹோல்டர் 28 புள்ளிகளை இழந்துள்ளார். 

இதன்மூலம், ரவீந்திர ஜடேஜா 386 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 2017-க்குப் பிறகு ஜடேஜா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் பேட்டிங் தரவரிசையில் 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து 10-வது இடத்தைப் பிடித்துள்ளார். பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா 1 இடம் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory