» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் : மழையால் தாமதம்!!

வெள்ளி 18, ஜூன் 2021 3:44:46 PM (IST)மழை காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் இன்று தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு - மைக்கேல் காவ், ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாகவும் தொலைக்காட்சி நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பாரோவும் பணியாற்றவுள்ளார்கள். 

கிறிஸ் பிராட், போட்டியின் நடுவராகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணி நேற்றே அறிவிக்கப்பட்டது. விஹாரி இடம்பெறவில்லை. பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா ஆகிய பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இந்நிலையில் சௌதாம்ப்டனில் மழை பெய்வதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் நாள் முதல் பகுதி ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது. உணவு இடைவேளைக்குப் பிறகு மழை பாதிப்பு இல்லையெனில் ஆட்டம் தொடங்கும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory