» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு: யூசுப் பதான் அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:42:37 PM (IST)
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆல்ரவுண்டர் யூசுப் பதான், அறிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் முக்கியமான வீரராக இருந்த யூசுப் பதான், 2010-ல் மும்பைக்கு எதிராக 37 பந்துகளில் சதமடித்தார். ஐபிஎல் போட்டியின் 2-வது அதிவேக சதம் அது. இந்திய வீரர்களில் முதலிடம். கடைசியாக 2019-ல் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் போட்டியில் 174 ஆட்டங்களில் 3204 ரன்களும் 42 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ராஜஸ்தான் அணிக்காக 2007-லிலும் கேகேஆர் அணிக்காக 2012 மற்றும் 2014-லிலும் ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார்.
ஓய்வு குறித்த அறிவிப்பில் யூசுப் பதான் கூறியதாவது: இந்தியாவுக்காக ஒருமுறை உலகக் கோப்பையை வென்றதும் சச்சின் டெண்டுல்கரை என் தோளில் தூக்கிச் சுமந்ததும் மறக்க முடியாத தருணங்கள். என்னுடைய சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் தோனி தலைமையிலும் ஐபிஎல் அறிமுகம் ஷேன் வார்னே தலைமையிலும் ரஞ்சி அறிமுகம் ஜகோப் மார்டின் தலைமையிலும் நிகழ்ந்தன. கெளதம் கம்பீர் தலைமையில் கேகேஆர் அணியில் விளையாடி இருமுறை நாங்கள் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளோம். எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த என்னுடைய சகோதரர் இர்பான் பதானுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக புவனேஸ்வர் குமார் தேர்வு!
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 5:12:49 PM (IST)

ஐ.பி.எல். போட்டிகளில் 350 சிக்சர்கள்: கிறிஸ் கெய்ல் புதிய சாதனை!!
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 11:48:19 AM (IST)

சஞ்சு சாம்சன் போராட்டம் வீண் தான் : கடைசிப்பந்தில் பஞ்சாப் த்ரில் வெற்றி
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 10:45:27 AM (IST)

ஃபினிஷிங் முக்கியம்: மணிஷ் பாண்டேவுக்கு வீரேந்திர சேவாக் அட்வைஸ்
திங்கள் 12, ஏப்ரல் 2021 3:43:41 PM (IST)

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை தோல்வி ஏன்? கேப்டன் தோனி விளக்கம்
திங்கள் 12, ஏப்ரல் 2021 12:41:50 PM (IST)

சென்னையில் ஐபிஎல் 2021 தொடங்கியது: மும்பையை வீழ்த்தியது பெங்களூரு!!
சனி 10, ஏப்ரல் 2021 10:11:53 AM (IST)
