» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தேசிய அளவிலான ஜூனியர் அத்லெட்டிக்ஸ் சாம்பியன் ஷிப் : முதலூர் மாணவனுக்கு தங்கப்பதக்கம்

வெள்ளி 19, பிப்ரவரி 2021 10:24:24 AM (IST)

தேசிய அளவிலான ஜூனியர் அத்லெட்டிக்ஸ் சாம்பியன் ஷிப்  போட்டியில்  நீளம் தாண்டுதலில் முதலூரைச் சேர்ந்த மாணவன் ஜெஸ்வின் ஆல்ட்ரின் முதலிடம் பெற்று தங்கபதக்கம்  பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் எஸ்.ஜே. மஸ்கோத் உரிமையாளர் ஜான்சன் மகன் ஜெஸ்வின் ஆல்ட்ரின் சென்னை எம்.சி.சி கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அசாம் மாநிலம் கௌகாட்டியில் நடைபெற்ற 20 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கான  36வது தேசிய அளவிலான ஜூனியர் அத்லெட்டிக்ஸ் சாம்பியன் ஷிப்  போட்டியில் பங்கேற்றார். 

அதில் நீளம் தாண்டுதல் போட்டியில் ஜெஸ்வின் ஆல்ட்ரின் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். இதேபோல் மத்திய பிரதேசம் போபாலில் நடந்த 18வது பெடரேசன் கோப்பை தேசிய ஜூனியர் தடகள சாண்பியன் சீப் போட்டியிலும் வென்று  முதலிடம் பெற்று தங்கபதக்கம் பெற்றுள்ளார். இதேபோல் இரண்டு முறை  இவர் தேசிய அளவிலான நீளம் தாண்டும் போட்டியில் வென்று தங்க மெடல் பெற்றுள்ளார். இப்போட்டியில் வென்றதன்  மூலம் 4வது முறையாக  தங்கப்பதக்கம்  பெற்ற வீரர் என பெருமையை பெற்றுள்ளார். போட்டியில் வென்று தமிழ்நாடு மற்றும் சென்னை எம்.சி.சி  கல்லூரிக்கும், சொந்த ஊருக்கும் பெருமை சேர்த்துள்ள ஜெஸ்வின் ஆல்ட்ரினை, அவர் படித்த திசையன்விளை டேனியல் தாமஸ் முதல்வர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் சாத்தான்குளம், முதலூர் சமூக ஆர்வலர்கள், முக்கி பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் பாராட்டி வாழ்த்தியுள்ளனர். 


மக்கள் கருத்து

DevabalanFeb 19, 2021 - 03:20:02 PM | Posted IP 162.1*****

Congratulations

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory