» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அஸ்வின், அக்சர் சுழலில் வீழ்ந்தது இங்கிலாந்து : தொடரை சமன் செய்தது இந்திய அணி!!

செவ்வாய் 16, பிப்ரவரி 2021 3:26:32 PM (IST)சென்னையில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் அடிப்பட்ட புலியாக இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. சென்னையில் பேட்டிங் இறங்கிய கில், புஜாரா, கோலி சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். ஆனால் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 161 ரன்கள் எடுத்தார். ரஹானே அதிரடியாக 67 ரன்கள் எடுத்தார்.

அதோடு பண்ட் அதிரடியாக 58 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 10 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்தது. இதன்பின் இறங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அஸ்வின் அதிரடியாக பந்து வீசி 48 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்பின் இரண்டாவது இன்னிங்ஸ் இறங்கிய இந்திய அணி அதிரடியாக தொடங்கினாலும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. புஜாரா, கில், ரோஹித் , பண்ட், ரஹானே அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

இந்த நிலையில் அஸ்வின், கோலி அதிரடியாக ஆடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். அஸ்வின் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். கோலி அதிரடியாக அரைசதம் அடித்தார். இதனால் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 286 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது. நேற்று இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய இங்கிலாந்து அணி வரிசையாக 3 விக்கெட்டுகளை இழந்தது.

இன்றும் காலையிலிருந்து இந்திய அணியின் சூழலில் இங்கிலாந்து அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. அக்சர் பட்டேல் 5 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட், குல்தீப் யாதவ் 2 விக்கெட் எடுத்தனர். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது. 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தி உள்ளது. இதனால் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory