» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சீனிவாச கவுடாவின் சாதனையை மற்றொரு கம்பளா வீரர்: 143 மீட்டர் தூரத்தை 13.61 வினாடிகளில் கடந்தார்
புதன் 19, பிப்ரவரி 2020 5:28:38 PM (IST)

கம்பளா போட்டியில் 143 மீட்டர் தூரத்தை 13.61 வினாடிகளில் கடந்து சீனிவாச கவுடாவின் சாதனையை மற்றொரு கம்பளா வீரர் முறியடித்துள்ளார். அவர் தன்னை ‘உசேன் போல்ட்டுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல’ என்று கூறினார்.
கம்பளா போட்டி கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிணகன்னடா, கார்வார் ஆகிய பகுதிகளில் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சேறு சகதியுமான பகுதியில் எருதுகளை உழவில் கட்டிக் கொண்டு இலக்கை நோக்கி ஓடுவதே கம்பளா போட்டி ஆகும். இதில் குறைந்த நேரத்தில் இலக்கை அடையும் வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி உடுப்பி அருகே இலகலில் நடந்த கம்பளா போட்டியில் தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி தாலுகா மீஜார் அஸ்வத்புராவை சேர்ந்த கம்பளா போட்டி வீரர் சீனிவாச கவுடா (வயது 29) என்பவர் கலந்துகொண்டார்.
இந்த போட்டியில் சீனிவாசகவுடா சேறு, சகதியுமான பந்தய பாதையில் 142.5 மீட்டர் இலக்கு தூரத்தை 13.62 வினாடிகளில் மாடுகளை ஓட்டிச் சென்று முதல் பரிசை வென்றார். அதாவது ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட் பந்தய தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். அதுபோல் கம்பளா போட்டியில் 142.5 மீட்டர் பந்தய தூரத்தை 13.62 வினாடிகளில் கடந்து சீனிவாச கவுடா சாதனை படைத்துள்ளார். சீனிவாச கவுடா பந்தய தூரத்தை கடக்க சென்ற வேகத்தின் அடிப்படையில் 100 மீட்டர் தூரத்தை 9.55 வினாடிகளில் கடந்திருப்பதாகவும், அவர் உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்து இருப்பதாகவும் கம்பளா போட்டியின் நடுவர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி மங்களூரு வேனூர் பகுதியில் கம்பளா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற பஜகோலி ஜோகிபெட்டு பகுதியை சேர்ந்த நிஷாந்த் ஷெட்டி என்பவர் சீனிவாச கவுடாவின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது, சீனிவாச கவுடா 142.5 மீட்டர் தூரத்தை 13.62 வினாடிகளில் கடந்தார். ஆனால் நிஷாந்த் ஷெட்டி 143 மீட்டர் தூரத்தை 13.61 வினாடிகளில் கடந்துள்ளார். அதாவது, நிஷாந்த் ஷெட்டி பந்தய தூரத்தை கடக்க சென்ற வேகத்தின் அடிப்படையில் 100 மீட்டர் தூரத்தை 9.52 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் சக கம்பளா வீரா் சீனிவாச கவுடாவின் சாதனையை 2 வாரங் களுக்குள் நிஷாந்த் ஷெட்டி முறியடித்துள்ளார். நிஷாந்த் ஷெட்டி ஓட்டிச் சென்ற எருதுகள் ஒசபெட்டு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணா என்பவருக்கு சொந்தமானது என்பது குறிப் பிடத்தக்கது. 100 மீட்டர் தூரத்தை 9.52 வினாடிகளில் கடந்த சீனிவாசகவுடா, ஜமைக்காவின் உசேன்போல்ட் சாதனைகளை முறியடித்த நிஷாந்த் ஷெட்டிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிகிறது.
இந்த சாதனை குறித்து கம்பளா வீரர் நிஷாந்த் ஷெட்டி கூறுகையில், கம்பளா போட்டியில் புதிய சாதனை படைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டுடன் என்னை ஒப்பிடுவது சரியானது அல்ல. ஏனெனில் கம்பளா களத்துக்கும், ஓட்டப்பந்தய களத்துக்கும் அதிக வித்தியாசம் உள்ளது என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஆட வேண்டும் - வாஷிங்டன் சுந்தர் விருப்பம்
திங்கள் 25, ஜனவரி 2021 5:09:47 PM (IST)

சிஎஸ்கே அணியில் 35 வயது ராபின் உத்தப்பா: ரசிகர்கள் அதிருப்தி!
வெள்ளி 22, ஜனவரி 2021 4:38:01 PM (IST)

சென்னையில் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:47:12 PM (IST)

தமிழக வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு : மக்கள் வெள்ளம் திரண்டது
வெள்ளி 22, ஜனவரி 2021 10:26:39 AM (IST)

தோனியுடன் என்னை ஒப்பிடாதீர்: ரிஷாப் பண்ட்
வெள்ளி 22, ஜனவரி 2021 10:25:16 AM (IST)

மலிங்காவை விடுவித்தது ஏன்? மும்பை இந்தியன்ஸ் விளக்கம்
வியாழன் 21, ஜனவரி 2021 12:08:44 PM (IST)
