» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

யு19 உலக கோப்பையை வென்றது வங்கதேசம்: இந்தியாவுக்கு ஆறுதல் அளித்த ஜெய்ஸ்வால், பிஷ்னாய்

திங்கள் 10, பிப்ரவரி 2020 11:05:46 AM (IST)19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி இழந்தாலும், ஜெய்ஸ்வால் மற்றும் பிஷ்னாய் ஆறுதல் அளிக்கும் வகையில் சாதனை படைத்துள்ளனர்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி முதன்முறையாக கோப்பை வென்றது.  இந்திய அணி தொடரை இழந்தாலும், இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இந்தியர்களே முதலிடம் இடம்பிடித்துள்ளனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 6 இன்னிங்ஸில் 4 அரைசதம் மற்றும் 1 சதம் உட்பட 400 ரன்கள் குவித்தார். இவரே தொடர் நாயகன் விருதையும் வென்றார். 

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுள் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த இருவரும் இந்திய அணி கோப்பை வெல்ல இறுதி ஆட்டத்திலும் போராடினர். பேட்டிங்கில் அசத்திய ஜெய்ஸ்வால் 88 ரன்கள் குவித்தார். பந்துவீச்சில் நடுவரிசை பேட்ஸ்மேன்களை மிரட்டிய பிஷ்னாய் 30 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருந்தபோதிலும், மற்ற வீரர்கள் இவர்களுக்கு பெரிதளவு கைகொடுக்கவில்லை. இதுவே ஆட்டத்தின் முடிவில் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory