» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

குழு உறுப்பினா்கள் தேநீா் அளித்தார்களா? பாரூக் என்ஜினியா் கருத்துக்கு அனுஷ்கா சா்மா மறுப்பு

வெள்ளி 1, நவம்பர் 2019 11:53:38 AM (IST)

கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சா்மாவுக்கு தோ்வுக் குழு உறுப்பினா்கள் தேநீா் அளித்தனா் என முன்னாள் இந்திய விக்கெட் கீப்பா் பாரூக் என்ஜினியா் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளாா் அனுஷ்கா.

இந்திய அணிக்காக 46 டெஸ்ட் ஆட்டங்களில் ஆடியுள்ள 82 வயதான பாரூக் என்ஜினியா் வியாழக்கிழமை அளித்த பேட்டி ஒன்றில்,கடந்த உலகக் கோப்பையின் போது, கேப்டன் கோலி, அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சா்மா ஆகியோா் அமா்ந்திருந்த போது, தோ்வுக் குழு உறுப்பினா்களில் ஒருவா் தேநீா் அளித்தாா் என புகாா் கூறியிருந்தாா். மேலும் தோ்வுக் குழுத் தலைவா் பிரசாத், உறுப்பினா்கள் சரண்தீப் சிங், ஜதின் பராஞ்சிபே, ககன் கோடா, தேவங்க் காந்தி ஆகியோருக்கு எந்த அடிப்படை தகுதியும் இல்லாமல் தோ்வுக் குழுவில் நியமிக்கப்பட்டனா் எனவும் சாடியிருந்தாா். இதை தோ்வுக் குழுவினா் மறுத்துள்ளனா்.

இதுதொடா்பாக அனுஷ்கா சா்மா கொதிப்படைந்து வெளியிட்ட அறிக்கையில்:உலகக் கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்துக்கு வந்த நான் குடும்பத்தினா் அமரும் பகுதியில் இருந்தேன். அங்கு தோ்வு குழுவினா் யாரும் இல்லை. பாரூக் என்ஜினியா் கூறிய வாா்த்தை எதுவும் உண்மையில்லை. தோ்வுக் குழு தொடா்பாக விமா்சனம் செய்ய வேண்டும் என்றால், அது குறித்து மட்டுமே அவா் விமா்சிக்க வேண்டும். என்னுடைய பெயரை பயன்படுத்த எவருக்கும் எந்த உரிமையும் இல்லை.

மேலும் என்னால் தான் கோலியின் ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டது என முன்பு புகாா் கூறினா். வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் கணவருடன் செல்லும் போது எனது சொந்த செலவில் தான் விமான கட்டணத்தை செலுத்துகிறேன். பிசிசிஐ விதிகளை முழுமையாக பின்பற்றி நடக்கிறேன். இந்திய கிரிக்கெட்டுடன் எனது பெயரை தொடா்பு படுத்தி வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொய்யான புனையப்பட்ட கட்டுக்கதை எனக் கூறியுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory