» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒப்பந்த முறை: பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டம்!

செவ்வாய் 29, அக்டோபர் 2019 5:41:17 PM (IST)

சர்வதேச ஆட்டங்களில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை இருப்பது போல முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கும் அந்த வசதி ஏற்படுத்தித்  என பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.

இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறையை அறிமுகப்படுத்தவுள்ளோம். புதிய நிதி நிர்வாகத்திடம் இதுகுறித்த வேலைகளைத் தொடங்கச் செய்வேன். இதுகுறித்து அலசி இறுதி முடிவெடுக்க இரு வாரங்கள் தேவைப்படும் என்று கங்குலி கூறியுள்ளார்.  தன்னுடைய வருமானத்தில் இருந்து 26% பணத்தை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கி வருகிறது பிசிசிஐ. அதில் பாதிப் பணம் சர்வதேச கிரிக்கெட்டில் ஈடுபடும் இந்திய வீரர்களுக்கு வழங்கப்படும். 

ஒவ்வொரு முதல் தர கிரிக்கெட் வீரருக்கும் விளையாடும் ஆட்டங்களுக்கு ஏற்ப வருமானம் பகிர்ந்தளிக்கப்படும். இதன்படி இந்திய முதல் தர கிரிக்கெட் வீரர்கள் வருடத்துக்கு ரூ. 25 லட்சம் முதல்  ரூ. 30 லட்சம் வரை, பங்குபெறும் ஆட்டங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சம்பாதிக்கிறார்கள். இந்த வருமானத்தை உயர்த்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் கங்குலி. முதல்தர கிரிக்கெட்டில் விளையாடும் இந்திய வீரர்கள் நாளொன்றுக்கு ரூ. 35,000 பெறுகிறார்கள். இதை 50,000 ஆக உயர்த்த கங்குலி திட்டமிட்டுள்ளார். மேலும் வீரர்களின் ஆண்டு வருமானம் உயரவும் அவர் நிர்வாகிகளிடம் பேசி வருகிறார்.

முதல் தர கிரிக்கெட்டில் ஈடுபடும் வீரர்களின் வாழ்க்கைத் தரம் இதன் மூலம் உயரும். இதனால் கிரிக்கெட்டில் அவர்கள் அதிகக் கவனம் செலுத்துவார்கள். இது இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவும் என்று கங்குலியின் புதிய திட்டம் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory