» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவில்பட்டி நகராட்சி ஆணையர் மாற்றம் : நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:36:48 PM (IST)

கோவில்பட்டி நகராட்சியின் (பொறுப்பு) ஆணையர் ஜஹாங்கீர் பாஷா மாற்றப்பட்டு, புதிய பொறுப்பு ஆணையராக வீரமுத்துகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி நகராட்சி ஆணையருக்கான முழு கூடுதல் பொறுப்பில் மாற்றம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் அ. ஜஹாங்கீர் பாஷா கோவில்பட்டி நகராட்சி ஆணையராக முழு கூடுதல் பொறுப்பு வகிக்க நியமித்து கடந்த 14.07.2026 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிர்வாக நலன் கருதி தற்போது ரத்து செய்யப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உதவி ஆணையர் ஏ. வீரமுத்துகுமார் மறு உத்தரவு வரும் வரை கோவில்பட்டி நகராட்சி ஆணையராக முழு கூடுதல் பொறுப்பு வகிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமிக்கப்பட்டுள்ள உதவி ஆணையர் உடனடியாகக் கோவில்பட்டி நகராட்சியில் பொறுப்பேற்று, அதற்கான அறிக்கையை உடனடியாக அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


