» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 10:46:24 AM (IST)
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
வருகிற 27ஆம் தேதி பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூரில் உள்ள திருக்கோவில்களுக்கு பக்தர்களின் வருகை அதிகளவு இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே இக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கோவில்பட்டி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை போன்ற முக்கிய பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூருக்கு 25.08.2026, 26.08.2026 27.08.2026 ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி கோட்டத்திலிருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகவே, திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூரில் உள்ள திருக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் இச்சிறப்பு பேருந்து இயக்கங்களை முழுமையாக பயன்படுத்தி, தங்களின் பயணத்தினை இனியதாக்கிக்கொள்ள தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


