» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை ஆனி வருஷாபிஷேக விழா!
வெள்ளி 26, ஜூன் 2026 8:33:34 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேகப் பெருவிழா நாளை (ஜூன் 27) சனிக்கிழமை விமரிசையாக நடைபெறவுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நாளை சிறப்பு வழிபாடுகள் மற்றும் விசேஷப் பூஜைகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விழா கால அட்டவணை விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வருஷாபிஷேக தினமான நாளை சனிக்கிழமை அதிகாலை 4:00 மணிக்குக் கோவில் நடை திறக்கப்படும். அதனைத் தொடர்ந்து அதிகாலை 4:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், காலை 5:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும். இதன் பின்னர் வருஷாபிஷேகத்திற்கான புனிதக் கும்பங்களுக்குச் சிறப்பு பூஜைகள் முறைப்படி செய்யப்படவுள்ளன.
காலை 8:00 மணிக்கு மேல் கோவில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் வெங்கடாஜலபதி ஆகிய தெய்வங்களின் சன்னதி விமானங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் மிக விமரிசையாக நடத்தப்படும்.
இதன் பின்னர், மாலை 4:00 மணிக்குச் சிறப்புச் சாயரட்சை தீபாராதனை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக, மாலை வழிபாடுகள் முடிந்தவுடன் குமரவிடங்கப்பெருமான் மற்றும் வள்ளி அம்மன் ஆகிய தெய்வங்கள் தனித்தனி தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி உள் மற்றும் வெளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கவுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 1 முதல் கைபேசி தடை உத்தரவு மேலும் தீவிரம்; மீறினால் பறிமுதல்!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:28:30 PM (IST)

அதிமுகவில் இருந்து கண்ணீருடன் விடைபெறுகிறேன்: எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிக்கை!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:19:59 PM (IST)

ஆராய்ச்சிப் பணிக்காக ரேடியோ காலர் பொருத்தப்பட்ட கழுகு மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 4:55:29 PM (IST)

தூத்துக்குடி மர அறுவை ஆலையில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள மரங்கள் சேதம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 4:34:45 PM (IST)

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தொடர்வார்: வைகோ நம்பிக்கை - திமுக மீது கடும் விமர்சனம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 3:47:32 PM (IST)

திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
செவ்வாய் 30, ஜூன் 2026 12:50:17 PM (IST)


