» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாமக உட்கட்சிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி? தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸை சந்தித்த அன்புமணி!
புதன் 24, ஜூன் 2026 3:52:20 PM (IST)

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக நிலவி வந்த தீவிர உட்கட்சி மற்றும் குடும்ப மோதல் போக்கு, இன்றைய நேரிடைச் சந்திப்பின் மூலம் சுமுக முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாமக கட்சி யாருக்குச் சொந்தம், கட்சியில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது குறித்து நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இரு தரப்பிற்கும் இடையே கடந்த ஓராண்டிற்கும் மேலாகப் பெரும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இது தொடர்பாக இரு தரப்பும் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்ததுடன், கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் தனித்தனியே தங்களது தரப்பு வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டனர்.
இந்நிலையில், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்ட இல்லத்திற்குப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சென்று தனது தந்தை ராமதாஸைச் சந்தித்துப் பேசினார். ராமதாஸின் 61-ஆவது ஆண்டு திருமணநாளையொட்டி, அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் சென்று இந்தச் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
தைலாபுரம் இல்லத்திற்கு வந்த தனது மகன் அன்புமணி ராமதாஸைப் பாமக நிறுவனர் ராமதாஸ் நெகிழ்ச்சியுடன் ஆரத்தழுவி வரவேற்றார். தொடர்ந்து, தனது தாய் மற்றும் தந்தையிடம் அன்புமணி ராமதாஸ் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், "இனி நல்லது நடக்கும்" என்று சுருக்கமாகப் பதிலளித்தார். தந்தை மற்றும் மகன் இடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த அரசியல் மற்றும் குடும்ப ரீதியிலான மோதல் போக்கு இச்சந்திப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளதால், பாமக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வழக்குகள் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது : அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சவால்!
புதன் 24, ஜூன் 2026 5:53:38 PM (IST)

மாமன்றத்தில் த்ரிஷா படத்தை வைக்க வேண்டும் : சுயேச்சை கவுன்சிலர் கோரிக்கையால் பரபரப்பு
புதன் 24, ஜூன் 2026 4:49:43 PM (IST)

நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
புதன் 24, ஜூன் 2026 4:04:08 PM (IST)

ஜூலை 1 முதல் புதிய ஊரக வளர்ச்சித் திட்டம் அமல் : பயிற்றுநர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நிறைவு!
புதன் 24, ஜூன் 2026 3:44:28 PM (IST)

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : தற்காலிகக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன!
புதன் 24, ஜூன் 2026 3:15:25 PM (IST)

திமுக ஆட்சிக்கால 500 மின்சார பஸ் டெண்டர் ரத்து: தவெக அரசு அதிரடி நடவடிக்கை!
புதன் 24, ஜூன் 2026 12:50:47 PM (IST)


