» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உயிரிழந்த கணவரின் சடலத்துடன் 3 நாட்களாக வீட்டிற்குள் முடங்கிய மனைவி, மகள்!
திங்கள் 15, ஜூன் 2026 12:27:22 PM (IST)
ஏரல் அருகே உயிரிழந்த கொத்தனாரின் சடலத்துடன், அவரது மனைவியும் மனநலம் பாதிக்கப்பட்ட மகளும் பயத்தின் காரணமாகக் கடந்த மூன்று நாட்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த தெற்கு வாலவல்லான், ஜே.எம். நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (70). கொத்தனார் வேலை செய்து வந்த இவருக்கு, அசுபதி (65) என்ற மனைவியும், முத்துலட்சுமி (38) என்ற மனநலம் பாதிக்கப்பட்ட மகளும் உள்ளனர். இந்நிலையில், சீனிவாசன் வயது முதிர்ச்சியின் காரணமாகக் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது வீட்டிலேயே திடீரென உயிரிழந்துள்ளார்.
கணவர் இறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அசுபதி, வீட்டின் கதவைத் திறக்காமல், கடந்த மூன்று நாட்களாக இறந்த கணவரின் சடலத்துடனேயே மகளை வைத்துக் கொண்டு வீட்டிற்குள் இருந்துள்ளார். இதற்கிடையே, கடந்த மூன்று நாட்களாகச் சடலம் வீட்டிற்குள்ளேயே இருந்ததால், இன்று அந்தத் தெரு முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஏரல் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துப் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஏரல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சீனிவாசனின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து ஏரல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரு மொழிக் கொள்கை தொடரும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: தமிழக ஆளுநர் உரை!
வியாழன் 18, ஜூன் 2026 11:12:19 AM (IST)

வாயை திறங்க சிஎம்!- கருப்பு பேட்ஜ் அணிந்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் முழக்கம்!
வியாழன் 18, ஜூன் 2026 10:37:59 AM (IST)

சப் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 10:32:12 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் கப்பல் கட்டும் தளம்: முதல்வர் விஜய்யுடன் ஹூண்டாய் அதிகாரிகள் ஆலோசனை!
வியாழன் 18, ஜூன் 2026 8:41:21 AM (IST)

மருத்துவமனை லிஃப்ட்டில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது!
வியாழன் 18, ஜூன் 2026 8:27:23 AM (IST)

கிரீன் காப்பர் பெயரில் ஸ்டெர்லைட்டை திறக்க முயற்சி: முதலமைச்சர் விஜய்யுடன் வைகோ திடீர் சந்திப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 8:05:01 AM (IST)


