» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மழை வெள்ளப் பாதிப்பைத் தடுக்க ரூ.53 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கம்: மேயர் ஜெகன் ஆய்வு
திங்கள் 15, ஜூன் 2026 7:53:07 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ரூ.53 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பிரதான பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணியை, மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகரத்தின் மிக முக்கிய வடிகாலாக விளங்கும் பக்கிள் ஓடையை, எப்.சி.ஐ. கிடங்கு முன்பிருந்து தொடங்கி திரேஸ்புரம் வரை சுமார் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு, 6 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யும் பணி ரூ.53 கோடி மதிப்பீட்டில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், குரூஸ்புரம் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தூத்துக்குடி மாநகர மக்களை மழை வெள்ளக் காலங்களில் பாதுகாப்பதில் பக்கிள் ஓடை மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கடும் மழையின் போது, இந்த ஓடை வழியாகவே பெரும்பாலான வெள்ளநீர் கடலுக்குச் சென்றது.
இதனால் அண்ணா நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, மில்லர்புரம் போன்ற முக்கியப் பகுதிகள் பெரும் பாதிப்பில் இருந்து தப்பின. தற்போது பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் இந்த ஓடை மேலும் அகலப்படுத்தப்படுவதால், வருங்காலங்களில் கூடுதலாக வெள்ளநீர் வந்தாலும் அது தேங்காமல் வேகமாக வெளியேறிவிடும். தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளால், ஓடையில் வழக்கமாகத் தண்ணீர் செல்வதில் எந்தத் தடையும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.
ஆய்வின் போது, மாநகராட்சி உதவிப் பொறியாளர் ராஜேஷ்கண்ணா, பகுதிச் செயலாளர் சுரேஷ்குமார், போல்பேட்டை பகுதிப் பிரதிநிதி பிரபாகர் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
இவர்கள்Jun 15, 2026 - 06:36:08 PM | Posted IP 162.1*****
இவர்கள் எல்லாம் உருப்படியாக வேலை செய்கிறார்களா?????? தோண்டப்பட்டு மணல்களை ஆட்டைய போட்டு இருக்கிறார்களா??
மேயர் ஐயாJun 15, 2026 - 03:41:16 PM | Posted IP 172.7*****
நாலு வருஷத்துக்கு ஒருமுறை வரும் வெள்ளத்தை கடலுக்கு கொண்டுபோய் விடும் பபக்கிள் ஓடை விரிவு படுத்தும் பணி துவங்கியது மகிழ்ச்சி நாள்தோறும் மக்கள் ரயில் பயணத்திற்காக செல்லும் தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷன் சாலையும் அகலப்படுத்தினால் மக்கள் கூட்டம் அலைமோதுவது குறையும் இதற்காக சிவன்கோவில் தெரு கிழமேல் சாலையில் [பழைய மாநகராட்சி பின் தெரு சாலையில் உள்ள] ரயில்வே நிலைய சொந்த நிலத்தில் உள்ள 300 அடி அகலம் கொண்ட சுவற்றை அகற்றி அதன் வழியே ரயில்வே ஸ்டேஷன் சென்று வர அழகான இரு வழி சாலை அமைக்க வேண்டும் இதனால் 50 ஆண்டுகள் நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் செய்தால் அந்த நற்பெயர் உங்களுக்கு கிடைக்கும் நன்றி மேயர் அவர்களே 🙏
மேலும் தொடரும் செய்திகள்

சாலையில் கிடந்த ரூ.60,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த மாணவனுக்குப் பாராட்டுகள் குவிகிறது!
திங்கள் 15, ஜூன் 2026 8:49:19 PM (IST)

தொடர்கதையாகும் பாலியல் தொல்லைகள்: த.வெ.க அரசுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்!
திங்கள் 15, ஜூன் 2026 8:15:36 PM (IST)

பாளையங்கோட்டை மத்திய சிறையில் வேலைவாய்ப்பு : கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் அறிவிப்பு
திங்கள் 15, ஜூன் 2026 5:43:43 PM (IST)

மாணவர்கள் விபூதி, குங்குமத்துடன் பள்ளிக்கு வருவது தவறில்லை: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
திங்கள் 15, ஜூன் 2026 5:06:31 PM (IST)

நெல்லையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பயிற்சி தொடக்கம்: சேகரிக்கப்படும் விபரங்கள்..!
திங்கள் 15, ஜூன் 2026 4:57:01 PM (IST)

அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது: அதிமுக வழக்கு!
திங்கள் 15, ஜூன் 2026 4:39:25 PM (IST)



BabuJun 15, 2026 - 07:32:30 PM | Posted IP 172.7*****