» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தனிநபர் கடன், கல்விக் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் ஆனந்த் மோகன் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 5:46:43 PM (IST)
சிறுபான்மையினர்களுக்கு தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், மற்றும் கல்விக்கடன் ஆகிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் விராசாத் (கைவினைக் கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் (ம) வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் – 1 – ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம நகர்ப்புறங்களில் ரூ. 3,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம் – 2 – ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம நகர்ப்புறங்களில் ரூ. 8,00,000/- வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும் (திட்டம் – 1 – ன் கீழ் நன்மைகளைப் பெற முடியாத நபர்கள்).
திட்டம் - 1 – ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ. 20,00,000/- ம், திட்டம் – 2 – ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டிவிகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ. 30,00,000/- கடன் வழங்கப்படுகிறது. கைவினைக் கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகித்த்தில் அதிகபட்ச கடனாக ரூ. 10,00,000/- கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ. 1,00,000/- ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
திட்டம் – 2 – ன் கீழ் ஆண்களுக்கு 10%, பெண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- கடன் வழங்கப்படுகிறது. மேலும், சிறுபான்மையின மாணவ / மாணவியர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுநிலை தொழிற்கல்வி தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் – 1 – ன் கீழ் ரூ. 20,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் – 2 – ன் கீழ் மாணவர்களுக்கு 8%, மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ. 30,00,000/- வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினக் கைவினைக் கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினைக் கலைஞர் கடன் திட்டம்) கைவினைக் கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள் / கருவிகள் / இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது. எனவே, சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிகளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கடன் விண்ணப்பங்களுடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிய ஆவணங்கள்
தனிநபர் கடன் திட்டம், சுயஉதவிக் குழுக்கடன், விராசாத் (கைவினைக் கலைஞர் கடன் திட்டம்)
1. சிறுபான்மையினர் மதச் சான்றிதழ்.
2. சாதிச் சான்றிதழ் / வருமானச் சான்றிதழ் / குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ்.
3. ஆதார் அட்டை.
4. திட்ட அறிக்கை (கடன் தொகை ரூ. 5,00,000/- க்கு மேல் இருப்பின்).
5. வங்கிகள் கோரும் இதர ஆவணங்கள்.
கல்விக் கடன்
1. சிறுபான்மையினர் மதச் சான்றிதழ்.
2. சாதிச் சான்றிதழ் / வருமானச் சான்றிதழ் / இருப்பிடச் சான்றிதழ் நகல் / குடும்ப அட்டை.
3. ஆதார் அட்டை.
4. உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) அசல்.
5. கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது அசல் (Original).
6. மதிப்பெண் சான்றிதழ் நகல்.
7. வங்கிகள் கோரும் இதர ஆவணங்கள்.
இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் / மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பணத் தகராறில் வாலிபருக்குக் கத்திக்குத்து: ஒருவர் கைது - மேலும் 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
புதன் 10, ஜூன் 2026 12:58:11 PM (IST)

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் : 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு
புதன் 10, ஜூன் 2026 11:42:13 AM (IST)

இன்ஸ்டாகிராம் காதலை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை - போலீஸ் விசாரணை!
புதன் 10, ஜூன் 2026 11:13:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 44 காலிப்பணியிடங்கள் : ஜூன் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
புதன் 10, ஜூன் 2026 11:02:53 AM (IST)

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார் - முதல்வர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி!
புதன் 10, ஜூன் 2026 10:08:42 AM (IST)

பாதயாத்திரை பக்தர்கள் மீது பஸ் மோதி விபத்து : கொரியர் ஊழியர் பரிதாப பலி
புதன் 10, ஜூன் 2026 8:45:37 AM (IST)


