» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிரபல தொல்லியல் ஆய்வாளர் த.தவசிமுத்து மாறன் காலமானார்: தொல்லியல் துறையினர் இரங்கல்!
செவ்வாய் 26, மே 2026 8:14:22 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று கல்வெட்டுகளை தேடித்தேடி ஆவணப்படுத்திய புகழ்பெற்ற தமிழ் அறிஞரும், தொல்லியல் ஆய்வாளருமான த.தவசிமுத்து மாறன் இன்று திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த த.தவசிமுத்து மாறன், அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தனது வாழ்நாளின் இறுதி வரை தீவிரத் தொல்லியல் ஆய்வாளராகவும், எழுத்தாளராகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது மறைவுக்குத் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி விடுத்துள்ள இரங்கல் குறிப்பில்: "நமது மாவட்டத்தின் வரலாற்றுப் பாரம்பரிய உள்கட்டமைப்பை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்றதில் தவசிமுத்து மாறன் அவர்களின் பங்கு அளப்பரியது. அவரது வழிகாட்டுதலின் படிதான், பட்டினமருதூரில் வாதாபி கணபதி குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க 'வீரக்கல்' ஒன்றை ஆவணப்படுத்தி எனது தொல்லியல் பயணத்தைத் தொடங்கினேன்.
அதேபோல், மடத்தூர் கமலைக்கிணற்றுப் பகுதியில் கண்டறியப்பட்ட 13-ஆம் நூற்றாண்டின் கல்வெட்டை அவரோடு இணைந்து ஆவணப்படுத்திய நிகழ்வுகள் இன்றும் என் கண் முன்னே நிழலாடுகின்றன. தள்ளாமையைப் பொருட்படுத்தாமல் தமிழகத்தின் தொல்பொருட்களைத் தேடித்தேடி அலைந்த மாபெரும் தமிழ்ப்பற்றாளரை இழந்து நிற்கிறோம்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
த.தவசிமுத்து மாறனின் மறைவு குறித்துத் தூத்துக்குடி மாவட்ட வரலாற்றுப் பேராசிரியர்கள், கல்வெட்டியல் ஆய்வாளர்கள், பனை வாரிய பிரதிநிதிகள், பிராந்தியச் செய்தியாளர்கள் பாசறை மற்றும் வரலாற்றுத் துறையினர் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துள்ளனர்.
மறைந்த த.தவசிமுத்து மாறனின் இறுதிச் சடங்குகள் மற்றும் நல்லடக்க நிகழ்வுகள், நாளை 27.05.2026 (புதன்கிழமை) ஆறுமுகநேரி - மூலக்கரை செல்லும் சாலையில் அமைந்துள்ள பூவரசூர் மயான பகுதியில் நடைபெறும் என அவரது குடும்பத்தினரும், பிராந்தியத் தொல்லியல் வரலாற்று அமைப்பினரும் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பணத் தகராறில் வாலிபருக்குக் கத்திக்குத்து: ஒருவர் கைது - மேலும் 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
புதன் 10, ஜூன் 2026 12:58:11 PM (IST)

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் : 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு
புதன் 10, ஜூன் 2026 11:42:13 AM (IST)

இன்ஸ்டாகிராம் காதலை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை - போலீஸ் விசாரணை!
புதன் 10, ஜூன் 2026 11:13:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 44 காலிப்பணியிடங்கள் : ஜூன் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
புதன் 10, ஜூன் 2026 11:02:53 AM (IST)

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார் - முதல்வர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி!
புதன் 10, ஜூன் 2026 10:08:42 AM (IST)

பாதயாத்திரை பக்தர்கள் மீது பஸ் மோதி விபத்து : கொரியர் ஊழியர் பரிதாப பலி
புதன் 10, ஜூன் 2026 8:45:37 AM (IST)


