» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போலி பாலிசி தயாரித்த நெல்லை வாலிபர் கைது : தூத்துக்குடி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
புதன் 29, ஏப்ரல் 2026 8:43:21 PM (IST)
தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குப் போலி காப்பீடு எடுத்து மோசடி செய்த திருநெல்வேலியைச் சேர்ந்த நபரைத் தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 03.10.2023 அன்று புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 'மகிந்திரா மேக்சி கேப்' வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பெண்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தபோது, அந்த வாகனத்திற்கு 'மேக்மா ஹெச்.டி.ஐ' பொதுக் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு இருப்பதாகச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் காப்பீட்டு நிறுவனம் அளித்த விளக்கத்தில், சம்பந்தப்பட்ட வாகனத்திற்குத் தங்கள் நிறுவனத்தில் எந்தவொரு பாலிசியும் எடுக்கப்படவில்லை என்றும், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என்றும் தெரிவித்தது. இது தொடர்பாக மேக்மா ஹெச்.டி.ஐ நிறுவன மேலாளர் விஜயராகவன் அளித்த புகாரின் பேரில், புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் காப்பீடு சம்பந்தமான சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின:
இணையதளம் வாயிலாக நான்கு சக்கர வாகனத்தின் எண்ணைப் பதிவிட்டு, அது இருசக்கர வாகனம் எனப் பொய்யாகக் காட்டி குறைந்த கட்டணத்தைச் செலுத்தி அசல் பாலிசி பெறப்பட்டுள்ளது. பின்னர், அந்த அசல் பாலிசியில் வாகன உரிமையாளர் பெயர், முகவரி, வாகனத்தின் வகை ஆகியவற்றை எடிட் செய்து போலி பாலிசியாக மாற்றியுள்ளனர். 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 300-க்கும் மேற்பட்ட போலி காப்பீட்டுப் பத்திரங்களை இக்கும்பல் வழங்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், என்ஜிஓ 'ஏ' காலனி, தெற்கு கடைசித் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுப்பாராஜ் (38), என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே திருநெல்வேலி பொருளாதார குற்றப்பிரிவில் போலி இன்சூரன்ஸ் தொடர்பான வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றுள்ள போலி காப்பீட்டு வழக்குகளிலும் இவருக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மே 4-ல் வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்கள், முகவர்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு!
வெள்ளி 1, மே 2026 12:27:16 PM (IST)

தூத்துக்குடியில் கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் மதுபாட்டில்கள் விற்பனை - ஒருவர் கைது
வெள்ளி 1, மே 2026 12:16:02 PM (IST)

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 1, மே 2026 11:51:27 AM (IST)

வெப்ப அலையிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவுரை!
வெள்ளி 1, மே 2026 10:30:26 AM (IST)

வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத உயர்வு : இன்று முதல் அமல்!
வெள்ளி 1, மே 2026 10:21:34 AM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: டீ மாஸ்டருக்கு 16 ஆண்டு சிறை – போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 1, மே 2026 8:50:14 AM (IST)



Babuமே 1, 2026 - 08:25:30 AM | Posted IP 162.1*****