» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: அமைச்சர் கீதா ஜீவன் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 8:03:39 AM (IST)

தூத்துக்குடியில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், திமுக வேட்பாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் தனது குடும்பத்தினருடன் வந்து தனது வாக்கைச் செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 83-வது வாக்குச்சாவடிக்கு இன்று காலை சரியாக 7 மணிக்கு அமைச்சர் கீதா ஜீவன் வருகை தந்தார். வரிசையில் முதல் ஆளாக நின்று அவர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்பார்" எனத் தெரிவித்தார்.
அமைச்சரைத் தொடர்ந்து, அவரது கணவரும் திமுக கலை இலக்கிய அணி அமைப்பாளருமான ஜீவன் ஜேக்கப் மற்றும் அவரது மகன் டாக்டர் மதில் ஜான் ஆகியோரும் அதே வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இளம் வாக்காளர்கள் உற்சாகம்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று காலை முதலே இளம் வாக்காளர்கள் மற்றும் கன்னி வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர். தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள கீதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 82-வது வாக்குச்சாவடியில், முதல்முறையாகத் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய கல்லூரி மாணவி ஒருவர் மிகுந்த உற்சாகத்துடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: "முதன்முதலாக வாக்களித்திருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. வாக்குச்சாவடிக்குள் நுழையும்போது ஒருவிதமான அச்சமும், பதற்றமும் இருந்தது. ஆனால், வரிசையில் நின்று எனது அடையாளத்தைச் சரிபார்த்து, விரலில் மை வைத்த பிறகு அந்தப் பயம் மறைந்துவிட்டது. தற்போது எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியது மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தச்சநல்லூரில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:30:07 PM (IST)

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை - போக்சோ நீதிமன்றம் அதிரடி!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:21:40 PM (IST)

சென்னை - நெல்லை இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:36:55 PM (IST)

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு: 9பேரின் மரண தண்டனையை உறுதி செய்ய சி.பி.ஐ. முறையீடு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:21:17 PM (IST)

தமிழக தேர்தல் அரசியலில் புதிய விடியல்: 85% வாக்குப்பதிவு குறித்து விஜய் கருத்து!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:04:18 PM (IST)

வாக்குப்பதிவில் வரலாறு படைத்த தமிழகம்: திமுக வேட்பாளர்களுடன் ஸ்டாலின் திடீர் ஆலோசனை!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:51:57 PM (IST)

