» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாகத் தமிழகம் வளர்ந்துள்ளது: அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:34:48 AM (IST)

இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாகத் தமிழகம் வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிப் பணிகள் தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் 7 மற்றும் 8-வது வார்டுகளுக்கு உட்பட்ட கலைஞர் நகர், மேட்டுப்பட்டி, லூர்தம்மாள்புரம், திரேஸ்புரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் கீதா ஜீவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: "முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவட மாடல் ஆட்சியில் பொருளாதாரம், தொழில், கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்றத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.
பெண்களுக்குக் கலைஞர் உரிமைத் தொகையாக 3 மாதப் பணம் மற்றும் கோடைகால உதவித்தொகை எனச் சேர்த்து 5,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இந்த உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கிறது. அதிமுகவின் முகமூடிக்கு பின்னால் பாஜக செயல்படுகிறது. சிஏஏ மற்றும் வக்ஃபு வாரிய சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக, இப்போது கிறிஸ்தவர்களுக்கு எதிரான சட்டங்களுக்கும் துணை போகிறது" எனக் குற்றம் சாட்டினார்.
கலைஞர் நகரில் பிரசாரத்தைத் தொடங்கிய அமைச்சர், "கடந்த முறை நீங்கள் கேட்டபடி சாலை, குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றியுள்ளேன். உங்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்க்கும் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள்" எனக் கேட்டுக்கொண்டார்.
கடற்கரை பகுதிகளான மேட்டுப்பட்டி, திரேஸ்புரம் பகுதிகளில் மும்மதத்தைச் சேர்ந்த மக்களும், ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் நல கமிட்டியினரும் அமைச்சருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பிரசாரத்தின் போது மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சகாயராஜ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தமுமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் குடிபோதையில் மினிபஸ் இயக்கிய ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை: 2 பஸ்கள் பறிமுதல்!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:28:03 AM (IST)

குடும்பத் தகராறில் பெற்ற தாயை உயிரோடு எரித்துக் கொன்ற மகன்: நெல்லை அருகே பயங்கரம்!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:03:40 AM (IST)

கோவில்பட்டி வளர்ச்சிக்கு மதிமுக என்றும் துணை நிற்கும் : துரை வைகோ எம்.பி. உறுதி!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 8:40:09 AM (IST)

திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கவே விஜய் களமிறங்கியுள்ளார் : நயினார் நாகேந்திரன்
சனி 11, ஏப்ரல் 2026 5:47:26 PM (IST)

தமிழக உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் அதிரடி மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவு!
சனி 11, ஏப்ரல் 2026 5:37:39 PM (IST)

நெல்லையில் 15 நாட்கள் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: ஏப்ரல் 17-ல் தொடக்கம்!
சனி 11, ஏப்ரல் 2026 5:13:32 PM (IST)

