» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

புதன் 8, ஏப்ரல் 2026 3:38:44 PM (IST)

ஆலங்குளம் பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர்  எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட மருதம்புத்தூர் ஊராட்சியில் மணிகண்டன் என்ற பனைத் தொழிலாளி பனைமரத்தில் பதநீர் இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் கள் இறக்கியதாகக் கூறி, காவல்துறையினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த மோதலின் போது, ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு குண்டுகள் துளைத்து தொழிலாளி மணிகண்டன் படுகாயமடைந்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பனைத் தொழிலாளர்களிடையே இது ஒருவித அச்சத்தையும் பீதியையும் உண்டாக்கியுள்ளது.

தேர்தல் நேரத்திலும் எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி, திமுக அரசின் காவல்துறை தொடர்ந்து 'ஏவல் துறையாக'ச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. பதநீர் இறக்கிய தொழிலாளி மீது பொய்க் குற்றம் சுமத்தி, துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர் மீது தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory