» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புழல் சிறையிலிருந்து தாக்கல் செய்த ஹரி நாடார் மனு தள்ளுபடி: தேர்தல் அலுவலர் அதிரடி!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 9:07:53 PM (IST)
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடச் சிறையிலிருந்தபடி வேட்புமனு தாக்கல் செய்த சத்திரிய சான்றோர் படை கட்சித் தலைவர் ஹரி நாடாரின் மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் நிராகரித்துள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பனங்காட்டு படை கட்சி சார்பில் போட்டியிட்ட ஹரி நாடார், பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி 'சத்திரிய சான்றோர் படை' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். தற்போது ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துச் சிறையிலிருந்தே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஹரி நாடார் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விபரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதில் தனக்கு 11.6 கிலோ தங்கம் இருப்பதாகவும், 6 சொகுசு கார்கள் மற்றும் ₹12 லட்சம் மதிப்பிலான இதர சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இன்று நடைபெற்ற வேட்புமனுக்கள் கூர்ந்தாய்வின் போது, ஹரி நாடாரின் மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் தீவிரமாகப் பரிசீலித்தார். இறுதியில், ஹரி நாடார் சிறையிலிருந்து தனது முகவர் மூலம் வேட்புமனுத் தாக்கல் செய்தது தேர்தல் விதிமுறைகளின்படி செல்லாது எனக் கூறி அவரது மனுவை நிராகரிப்பதாக அறிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவுடன் ஸ்டாலினுக்கு ரகசிய உடன்பாடா? -மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி எம்.பி. கண்டனம்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:42:17 PM (IST)

சாத்தான்குளம் வழக்கில் எடப்பாடியார் எடுத்த முடிவுக்குக் கிடைத்த நீதி : அதிமுக வரவேற்பு
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 4:23:16 PM (IST)

நெல்லையில் விஜய் பிரசாரத்திற்கு 51 நிபந்தனைகள்: செங்கோட்டையன் பேட்டி
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 4:07:26 PM (IST)

தூத்துக்குடி - கச்சகுடா இடையே புதிய வாராந்திர ரயில் சேவை நாளை தொடக்கம்: பயணிகள் மகிழ்ச்சி !
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 12:36:54 PM (IST)

கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூரில் விஜய், சாத்தூரில் நயினார் நாகேந்திரன் வேட்புமனுக்கள் ஏற்பு!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:48:16 AM (IST)

திருநெல்வேலி காவல் நிலையங்களை தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:40:09 AM (IST)

